மதுரை மாநகரில் முதல்நிலை காவலர்களாக இருந்து தலைமை காவலர்களாக பதவி உயர்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

மதுரை மாநகரில் முதல்நிலை காவலர்களாக இருந்து தலைமை காவலர்களாக பதவி உயர்வு

 


மதுரை மாநகரில் முதல்நிலை காவலர்களாக இருந்து தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு;


தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 15 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மதுரை மாநகரில் ஆயுதப்படை பிரிவில் (குழல் ஊதும் பிரிவு) 15 ஆண்டுகள் பணிபுரிந்த 12 முதல்நிலை காவலர்கள், தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றனர். பதவி உயர்வு பெற்றவர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் .ஜெ.லோகநாதன்‌,இ.கா.ப.,  நேரில் அழைத்து நற்பணி சான்றிதழ் வழங்கி, வரும் காலங்களில் சிறப்பாக பணிபுரிந்து தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டுமென தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad