சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா - திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா - திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா - திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பாதயாத்திரை பக்தர்கள் கையில் டேக் கட்டி தக்கார் அருள் முருகன் தொடங்கி வைத்தார். 

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூசத் திருவிழா இன்று (நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதன் பின்னர் உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து காலை 6.30 மணியளவில் கடலில் சுவாமி அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர், சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி, வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்துக்கு வந்து சேர்கிறார். 

அங்கு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி, தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து, கோயிலைச் சேருகிறார்

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா கோலாகலம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு கோயிலுக்கு விரதம் இருந்து பாதயாத்திரை ஆக திருநெல்வேலி சாலையாக வருகை தந்த பக்தர்கள் கோவிலில் எந்தவித சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக டேக் அணிவிக்கப்பட்டது. 

இதனை தக்கார் அருள் முருகன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதவியாளர்கள் செந்தமிழ் பாண்டியன் வேல் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad