தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூரில் பக்தர்களுக்கு அதிமுக சார்பில் அன்னதானம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூரில் பக்தர்களுக்கு அதிமுக சார்பில் அன்னதானம்.

தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூரில் பக்தர்களுக்கு அன்னதானம் - ஜெ. பேரவை இணைச் செயலாளர் பழக்கடை திருப்பதி ஏற்பாட்டில் எஸ். பி. சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடைபெற்றது . இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் பழக்கடை திருப்பதி ஏற்பாட்டில் தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு பாத யாத்திரையாக வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். 

சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ் பி சண்முகநாதன் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார் . 
 
இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், உடன்குடி ஒன்றிய அதிமுக செயலாளர் தாமோதரன், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் காசிராஜன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மகாலிங்கம், 

மாவட்ட அம்மா பேரவை இனைச்செயலாளர் ஆர் எம் கே எஸ் சுந்தர், வழக்கறிஞர் ஜேசுராஜ், டிபிஎஸ் சுயம்புலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் பழக்கடை திருப்பதி செய்து இருந்தார்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad