வல்லநாடு பகுதியில் வீட்டை ஜப்தி செய்யச் சென்ற போலீசார் முன்னிலையில், கணவன், மனைவி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததில் கணவர் உயிரிழந்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

வல்லநாடு பகுதியில் வீட்டை ஜப்தி செய்யச் சென்ற போலீசார் முன்னிலையில், கணவன், மனைவி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததில் கணவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வல்லநாடு பகுதியில் வீட்டை ஜப்தி செய்யச் சென்ற போலீசார் முன்னிலையில், கணவன், மனைவி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததில் கணவர் உயிரிழந்தார்.

சங்கரன் - பத்ரகாளி தம்பதி, ஆப்டஸ் ஃபினான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் தனது வீட்டை அடமானம் வைத்து 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.

தவணையை சரியாக செலுத்தாததால், நீதிமன்ற அனுமதி பெற்று, போலீஸ் பாதுகாப்புடன் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டை ஜப்தி செய்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சங்கரனும் பத்ரகாளியும் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளனர்.

சுமார் 45 நிமிடங்கள் போலீசார் கண்முன்னே அவர்கள் துடிதுடித்த நிலையில் சங்கரன் உயிரிழந்தார். அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad