நீலகிரி - எடக்காடு ஹட்டியில் பகலில் புலி உலா.
நீலகிரி மாவட்டம் எடக்காடு ஹட்டியில் குடியிறுப்பு பகுதிக்கு மத்தியில் பகல் நேரத்தில் புலி சர்வசாதாரணமாக உலாவரும் காட்சி ஒரு நபரால் பதிவு செய்யப்பட்டது. அனைவரையும் அச்சமடைய வைத்துள்ளது. இரவு நேரத்தில் உலா வந்த புலி பகல் நேரத்தில் உலா வருவது பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . குந்தாசப்பை, தும்மனட்டி, கப்பச்சி பகுதிகளில் ஒரு ஆட்கொல்லி புலி ஒரு பெண்மணியை கொன்று சில நாட்கள் அச்சுறுத்தி வந்தது . வனத்துறையினர் கூண்டுவைத்து பிடிக்க எவ்வளவோ முயன்றும் சிக்காமல் அந்த பகுதி மக்களை பத்து நாட்களுக்கு மேல் வீட்டிலேயே முடக்கியது. அதன் பின்னர் அனுமதிபெற்று சுட்டுக்கொன்று பிடிக்கப்பட்டது. பொதுமக்களின் அச்சம் இன்னும் தீரவில்லை அதற்க்குள் எடக்காடு ஹட்டிக்குள் புலி பகல் நேரத்தில் சர்வசாதாரணமாக உலாவரும் காட்சி வனப்பகுதியில் புலிக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்து புலியை கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்து அதன் உணவுதேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக