இருக்கன்துறையில் அமைந்துள்ள நூலகமானது பயன்பாடின்றி பாழடைந்து பூட்டி கிடக்கிறது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 பிப்ரவரி, 2025

இருக்கன்துறையில் அமைந்துள்ள நூலகமானது பயன்பாடின்றி பாழடைந்து பூட்டி கிடக்கிறது.

பயன்பாடில்லாத நூலகம் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இருக்கன்துறையில் அமைந்துள்ள நூலகமானது பயன்பாடின்றி பாழடைந்து பூட்டி கிடக்கிறது. 

நூலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான நூல்களோ, செய்தி தாள்களோ இன்றி வெறுமையாக உள்ளதுடன், நூலத்தில் நூலகரோ, வேறு எந்த ஊழியர்களோ இல்லை. மேலும் நூலக கட்டிடமானது பாழ்பட்டு மிகவும் பழுதடைந்து உள்ளது. 

எனவே இருக்கன்துறை ஊர் பொது மக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நூலகமின்றி மிகுந்த அவதிக்குள்ளாகின்றர். அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து நூலகத்திற்கு புதிதாக கட்டிடம் அமைத்து கொடுத்து தேவையான வசதிகள் மற்றும் புத்தக வசதியும் செய்து கொடுத்தால் இருக்கன்துறை ஊர் பொது மக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த பயன் பெறுவார்கள்.

திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad