உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சார்ந்த கணவன் மனைவி தனது ஒரே மகன் உள்ளிட்ட மூன்று நபர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 பிப்ரவரி, 2025

உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சார்ந்த கணவன் மனைவி தனது ஒரே மகன் உள்ளிட்ட மூன்று நபர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.



உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சார்ந்த கணவன் மனைவி தனது ஒரே மகன் உள்ளிட்ட மூன்று நபர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.
 

கணவர் மரத்தில் தூக்கி மாட்டி  தொங்கி இறந்து கடந்துள்ளார். தாய் மகன் குட்டையில் நீரில் மூழ்கி இறந்த கடந்துள்ளார்.
 சந்தேகம். 


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அஜீஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை முத்து மகன் முத்துகுமார் வயது 53, என்பவர் நெய்வேலி என்எல்சி  10- ப்ளாக் பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் இன்று சொந்த கிராமத்தில் அவரது உறவினரின் கரும காரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரது மனைவி தேவி வயது 40, மகன் பிரவீன் வயது 12 ஆகிய மூன்று நபர்களும் நெய்வேலியில் இருந்து உளுந்தூர்பேட்டை அஜித் நகருக்கு இருசக்கர வாகனத்தில் அதிகாலை புறப்பட்டு வந்ததாக தெரிகிறது. 
இந்த நிலையில் அஜீஸ் நகர்  கிராமம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகாமையில் உள்ள கல் குட்டியில் தாய் மகன் இருவரும் இறந்த நிலையில் மிதந்து கிடந்தனர் மேலும் கணவன் முள்வேலி மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார் இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள்  மர்மமாக உள்ளதாக அதிர்ச்சியாக தெரிவிக்கின்றனர். 
இந்த சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை வட்ட காவல் ஆய்வாளர் வீரமணி என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். 
உடனே சம்பவ இடத்திற்கு உளுந்தூர்பேட்டை உட்கோட்டை டிஎஸ்பி பிரதீப் காவல் ஆய்வாளர் வீரமணி இடைக்கால் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அழகு செந்தில் தனிப்பிரிவு தலைமை காவலர்கள் மதுரவீரன் சக்திவேல் மற்றும் போலீஸார்கள் பிரேதத்தை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் அடித்து வைத்து பின்னர் இந்த இறப்பு தொடர்பாக என்ன காரணம் என்று தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவியும் தனது ஒரே மகனுடன் இறப்பு.


ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று நபர்களின் உயிரிழப்பு இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இவர்களின் இறப்பு மர்மமாக இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad