உளுந்தூர்பேட்டை அருகே கூட்டடி கிராமத்தை சேர்ந்தவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைபயண போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது போலீசார் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூட்ட டி கிராம பொதுமக்கள் 2018 ஆம் ஆண்டு முதல் வீட்டு மனை பட்டா கேட்டு உண்ணா நிலை போராட்டம் வட்டாட்சியர் அழைத்து பேசியும் எந்த பலனும் என்றும் ஆரி நத்தம் கிராம அலுவலர் அலுவலகம் முன்பு ஐந்து முறை போராட்டம் நடத்தப்பட்டது மேலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதை அடுத்து மீண்டும் வட்டாட்சியர் பேசியதில் எந்த பலனும் என்றும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் இடம் மனு கொடுத்தும் போராட்டம் நடத்தப்பட்டது பின்பு கோட்டாட்சியர் அழைத்து உத்திரவாதம் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. 2021 ஆகஸ்ட் 15 சாலை மறியல் போராட்டம் அறிவித்தவுடன் வரு வாய் கோட்டாட்சியர் அவர்கள் அரசு புறம்போக்கு சர்வே எண் 7\2 நான்கு ஏக்கர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து FIR போட்ட பின் அந்த ஆக்கிரமிப்பார்கள் அரசாங்க சொத்து எனக்கு தேவையில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் 2022 ஆகஸ்ட் 15 வீட்டு மனை இல்லாதவர்கள் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பதாக முடிவு செய்தனர் அப்போதும் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார் அதுவும் பலனில்லை 2023 இல் வட்டாச்சியர் . வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பயனாளிகள் பெயர் பட்டியல் தேர்வு செய்யப்பட்டது அதுவும் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் 2024 நவம்பர் மாதத்தில் ஆரிநத்தம் ஊராட்சியில் தீர்மான நகல் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்பதாக திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதை அடுத்து ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகல் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது அத்துடன் தீர்மான நகலும் பயனாளிகள் பட்டியலையும் இணைத்து மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கப்பட்டது இதனை பெற்றுக் கொண்டு பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவாதம் அளித்தும் பலன் இல்லை ஆகவே இதைக் கண்டித்து தற்பொழுது கூட்டடி கிராம பொதுமக்கள் சார்பாக கூட்டடி மாரியம்மன் கோவில் அருகில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடை பயணம் சென்ற CPI ML கட்சி சார்பாக நடை பயணம் சென்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சேந்தநாடு ராஜ்குமார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர் இதில் கடலூர் மாவட்ட செயலாளர் ராஜசங்கர் கள்ளக்குறிச்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் வல்லபநாதன் ஏழுமலை கூட்டடி கிளை தொடர்கள் வீரன் கொளஞ்சி சேட்டு வீரமணி ராமசாமி கலியமூர்த்தி பஞ்சமூர்த்தி தனவல்லி வீரம்மாள் மகாலட்சுமி கவிதா வள்ளி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக