கோட்டாறு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியை பாதுகாக்க தமிழக பழ அரசு முன்வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் தமிழக அரசுக்கு கோரிக்கை:-
தமிழ் நாட்டில் தமிழக அரசுக்கு சொந்தமான ஒரே ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மட்டுமே ஆகும். இக்கல்லூரியின் சிறந்த மருத்துவம் கன்னியாகுமரி மாவட்ட பொது மக்கள் மட்டும் அல்லாது தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொது மக்கள் மற்றும் கேரளா மக்களும் மருத்துவம் பார்க்க இங்கே வந்து செல்வதுண்டு இப்படி பெருமை கொண்ட இக் கல்லூரிக்கு இந்த ஆண்டு போதிய ஆசிரியர், போதிய மருத்துவர், போதிய பணியாளர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.இக் கல்லூரிக்கு மருத்துவர்,ஆசிரியர்,பணியாளர் உட்பட குறைந்த பட்சம் 30-பேர் இருக்க வேண்டும்.ஆனால் 26-பேர் மட்டுமே இருப்பதாக அறிய முடிகிறது. மத்திய அரசின் இது சம்பந்தமான குழுவினர் சோதனைக்கு வரும் போது போதிய ஆசிரியர்,போதிய மருத்துவர்,போதிய பணியாளர்கள் இல்லாததைக் காரணம் காட்டி இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க நேரிடலாம். எனவே தமிழக அரசு கால தாமதம் இன்றி இக் கல்லூரிக்கு போதிய ஆசிரியர்களையும்,போதிய மருத்துவர்களையும்,போதிய பணியாளர்களையும் நியமித்து தமிழக அரசின் ஒரே ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியை பாதுகாக்க வேண்டும்.மேலும் இக் கல்லூரிக்கு எதிராக சிலர் சதி வேலை செய்வதாகவும் அறிய முடிகிறது. அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இக் கல்லூரியை சிறப்புடன் நடத்த முடியும் இதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து இந்த சதியை முறியடிக்க முன்வர வேண்டும்.எனவே கன்னியாகுமரி மாவட்ட மக்களின் விருப்பத்திற்கு செவி சாய்த்து தமிழக அரசு இக் கல்லூரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் இவைகளை தமிழக அரசு வேகமாக செய்து நிறைவேற்றாத பட்சத்தில் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் அனைத்து கட்சிகள் மற்றும் பொது மக்களை ஒன்று திரட்டி கோட்டாறு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி முன்பு தர்ணா போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொண்டார்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக