குண்டேரிப்பள்ளம் அணை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்து ஆழ்குழாய் கிணறு அமைத்து சுமார் 6 கிலோ மீட்டர் தனியார் விவசாய நிலத்துக்கு கொண்டு செல்ல கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்ப்பால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் பைப் லைன் அமைக்கும் பணி நடந்தது.
டி.என்.பாளையம் அருகே உள்ள
குண்டேரிப்பள்ளம் அணையானது
குன்றி மலையடிவாரத்தில்
அமைந்துள்ளது. குண்டேரிப்பள்ளம்,
கொங்கர்பாளையம்,
வாணிப்புத்தூர்,
வினோபா நகர், கோவிலூர் உள்ளிட்ட
10 கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து
500 ஏக்கர் விளைநிலங்கள் இந்த
அணையின் மூலம் பாசன வசதி
பெற்று வருகிறது. இதுதவிர 10
கிராமங்களிலும் உள்ள 100-க்கும்
மேற்பட்ட கிணறுகள், ஆழ்குழாய்
கிணறுகள் இந்த அணையின்
மூலமாக நீர்த்தேக்கம் ஏற்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2018-ஆம்
ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை
அருகே உள்ள விவசாய நிலத்தில்
ஆழ்குழாய் கிணறு அமைத்து,
அங்கிருந்து சுமார் 6 கிலோ
மீட்டர் தொலைவில் தங்கவேல்
உட்பட 6 பேருக்கு சொந்தமான
50 ஏக்கர் விவசாய நிலத்திற்கு
பிளாஸ்டிக் குழாய்கள் அமைத்து
தண்ணீர் கொண்டு செல்ல
முயன்றனர். தனியார் நிலத்திற்கு
தண்ணீர் கொண்டு சென்றால்
குண்டேரிப்பள்ளம் அணையின்
நிலத்தடி நீர் மட்டம் குறையும்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் அண்ணாதுரை, அந்தியூர் தாலுகா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக