தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:-
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூரில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆசியாவிலேயே மிக உயர்ந்த மாத்தூர் தொட்டி பாலத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் வரலாற்றை குறிக்கும் வகையில் இருந்த கல்வெட்டை சமூக விரோதிகள் உடைத்துள்ளனர்.இந்த செயலை செய்த சமூக விரோதிகளை காவல் துறை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். மேலும் மாத்தூர் தொட்டி பாலத்தின் பகுதியில் இருந்த பெருந்தலைவர் காமராஜர் குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டை புதிதாக அந்த பகுதி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சீர் செய்து நிறுவ வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டுக் கொண்டார்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக