உச்சிப்புளி அருகே பிரப்பன் வலசை அருள்மிகு ஸ்ரீ மயிலேறும் முருகப்பெருமாள் ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் ஆலய திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மயில் ஏறும் முருகப்பெருமாள் மற்றும் ஸ்ரீ பாம்பன் ஸ்ரீமத் குமரகுருபரர் சுவாமிகள் திருக்கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது இவ்விழாவில் காலையில் பால்குடங்கள் காவடிகள் எடுத்து வந்து அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.இத்திருத்தலம் முருகன் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிக்கு காட்சி அளித்த திருத்தலமாக கூறப்படுகிறது. இவ்விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
உச்சிபுளி காவல்நிலையம் காவல் ஆய்வாளர், தலைமையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக