டெல்லியில் திமுக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள மாணவரணி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

டெல்லியில் திமுக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள மாணவரணி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது



 திருப்பூர் டைஸ் & கெமிக்கல்ஸ் அசோசியேசன் திருமண மண்டபத்தில் கல்வியை சிதைக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டுவரும் ஒன்றிய அரசை கண்டித்து கழகத் தலைவர், மாண்புமிகு 

தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி 

பல்கலைக்கழக நிதிநல்கை குழு (UGC) 

வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையை 

திரும்ப பெற கோரி திமுக மாணவர் அணியின் சார்பில் தலைநகர் டெல்லியில் 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கும் மாபெரும் போராட்டத்தில்  கலந்து கொள்வது குறித்து

திருப்பூர் வடக்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கழக திமுக மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் 

மாணவர் அணியை சார்ந்த தோழர்கள் கலந்து கொண்ட மாணவர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வெகு சிறப்பாக நடந்து முடிந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டத்தில் 

சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும்  

சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad