காதலர் தினத்தன்று செல்போன் டவர் மீது ஏறி வாலிபர் காதலி இங்கே வந்தால் மட்டும்தான் நான் கீழே இறங்கி வருவேன் என்று அலப்பறை செய்த வாலிபர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த கலிம் என்ற 21 வயது வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் அந்த காதலுக்கு தற்போது அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது இதனால் மனமுடைந்த களின் உளுந்தூர்பேட்டை அங்காளம்மன் திரு பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் செல்போன் டவர் உச்சியில் ஏறி நின்று தனது காதலி இங்கு வந்தால் தான் செல்போன் டவரில் இருந்து இறங்குவேன் என கூறி தற்கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார் அவரிடம் போலீசார் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் கீழே இறங்காமல் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகின்றார் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் மற்றும் காவல் ஆய்வாளர் வீரமணி உள்ளிட்ட போலீசார் அந்த வாலிபரிடம் ஒலிபெருக்கி மூலமாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போரிலும் போலீசார் மட்டுமின்றி பெற்றோர் நண்பர்கள் என யார் அழைத்தாலும் அந்த நபர் செல்போன் டவர் கோபுரத்திலிருந்து இறங்க மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் வேறு வழியின்றி அவர் காதலிப்பதாக கூறிய அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து அந்த வாலிபரிடம் அந்த பெண்ணை காட்டிய பிறகு தான் அந்த வாலிபர் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார் காதலர் தினத்தன்று தனது காதலியை பார்க்க வேண்டும் என்றும் தனது காதலியுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் இரண்டு மணி நேரமாக செல்போன் டவரின் உச்சியில் நின்று வாலிபர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து இறுதியாக காதலர் தினத்தில் தனது காதலியை சந்தித்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழக குரல் D.செல்வம் உளுந்தூர்பேட்டை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக