உளுந்தூர்பேட்டையில் தைப்பூசத்தை முன்னிட்டு அன்னதானத்தை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

உளுந்தூர்பேட்டையில் தைப்பூசத்தை முன்னிட்டு அன்னதானத்தை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்

 


உளுந்தூர்பேட்டையில் தைப்பூசத்தை முன்னிட்டு அன்னதானத்தை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணி கூண்டு திடலில் வள்ளலார் சமுதாய அறக்கட்டளை சார்பில் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்ட வள்ளலார் படத்திற்கு உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன் முன்னிலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. பின்னர் வள்ளலாருக்கு படையல் இடப்பட்ட சாதம் பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளலாரை வழிபட்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரமம் அம்பா, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசங்கர், மாவட்ட கவுன்சிலர் ப்ரியா பாண்டியன் நகர மன்ற உறுப்பினர்கள்  கலா சுந்தரமூர்த்தி, மாலதி இராமலிங்கம், செல்வகுமாரி ரமேஷ்பாபு, அறங்காவல் குழு தலைவர்கள் செல்லையா, பிரகாஷ், வள்ளலார் சமுதாய அறக்கட்டளை நிர்வாகிகள் பாண்டியன், கோபால், ராஜேஷ்கண்ணன், சாதுசம்பத், சுரேஷ், சரவணன், வீரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad