மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற பாபா மெட்ரிக் பள்ளி மாணவி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ரா. திபீஸ்கா மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். அம்மாணவியை பள்ளி தாளாளர் ஆர். கபிலன் பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவித்தார். மாநில அளவில் இரண்டாம் பரிசு வென்ற மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக