இராமநாதபுரம் சமஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

இராமநாதபுரம் சமஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா


இராமநாதபுரம் சமஸ்தானத்தில் உள்ள   ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன்  திருக்கோயில் கும்பாபிஷேக விழா'


 இராமநாதபுரம் மாவட்டம் சேதுபதி சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில் அரண்மனை வளாகதில் அமைந்துள்ளது  இத்திருகோவிலின் கும்பாபிஷேக விழா, சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கோபுரத்தின்  கலசத்தில் புனித தீர்த்த நீர் கொண்டு  ஊற்றப்பட்டு   பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியும்  பூஜைகள் பஜனை  நாதஸ்வர கச்சேரி  சிறப்பாக நடைபெற்றன, இத்திருக்கோயில் குடமுழுக்கு விழாவில்  இராமநாதபுரம் சமஸ்தானம், ராணி ராஜேஸ்வரி நாச்சியார்,  லட்சுமிகுமரன்சேதுபதி,  இளைய மன்னர் கே.பி.எம் நாகேந்திர சேதுபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் அலுவலர்கள்  சுற்றுவட்டார பொதுமக்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.அன்றைய தினம்  மாலை அரண்மனை வளாகத்தில்  ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் தேரில் உலா கோயில்  வந்தடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad