தமிழக குரல் இணையத்தள செய்தியின் எதிரொலியாக!!!!!
நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மிக அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் கமர்சியல் சாலையில் அமைந்துள்ள கழிவுநீர் டிரைனேஜ் இரண்டு நாட்களுக்கு முன் உடைந்து மனிதக் கழிவுகள் ரோட்டோரத்தில் சென்று கொண்டிருந்தது. இந்த சாலையின் பகுதியில் புகழ்பெற்ற பிரிக்ஸ் பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த சாலையைப் பயன்படுத்தும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது என்று நம் தமிழக குரல் இணையதள செய்தியில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் தமிழக குரல் இணையதள செய்தியின் எதிரொலியாக அப்பகுதியில் சீரமைப்பு பணி நடைபெற்றது. தமிழக குரல் தமிழக குரல் இணைத்தள செய்தி சார்பாக அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத்குமார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக