சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப் பணி திட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 பிப்ரவரி, 2025

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப் பணி திட்டம் நடைபெற்றது.

 


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப் பணி திட்டம் நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் இலுப்பைக்குடி கிராமத்தில் 28.01.2025 முதல் 03.02.2025 வரை ஏழு நாட்கள் நடைபெற்றது. அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இச்சிறப்பு முகாமில், கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்று இலுப்பைக்குடி கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோவில், தண்ணீர் பந்தல் ஊரணி மற்றும் அரசுப் பள்ளி வளாகம் போன்ற இடங்களில் தூய்மைப்  பணி மேற்கொண்டனர்.   மாலை நேரங்களில், மாணவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் யோகா பற்றிய விழிப்புணர்வு சொற்பொழிவுகள் நடத்தப் பெற்றன. கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் சுந்தரி,  முனைவர் தெய்வமணி, முனைவர் செந்தில்குமார் மற்றும் முனைவர் லட்சுமணக்குமார் ஆகியோர்  நிகழ்ச்சியை சிறப்பாக  ஒருங்கிணைந்து நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad