உளுந்தூர்பேட்டை அருகே சேலம் நெடுஞ்சாலை ஓரமாக உள்ள விவசாய கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் சடலத்தை கைப்பற்றி தற்கொலையா ? கொலையா ? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சேலம் தேசிய நெடுஞ்சாலை ஒலையனுர் அருகே விவசாய கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக கிணற்றின் உரிமையாளருக்கு தகவல் தெரியவந்தது இதனைத் தொடர்ந்து கிணற்றின் உரிமையாளர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் மிதக்கிய ஆண் சடலத்தை கைப்பற்றி உடல் கூர் ஆய்விற்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார்? பெயர் என்ன? எந்த ஊர் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் வீசினார்களா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் தமிழக குரல் D.செல்வம் உளுந்தூர்பேட்டை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக