சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சாலை விதிமுறைகள் குறித்து CBSE பள்ளியில் வினாடி வினா போட்டி 30 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 பிப்ரவரி, 2025

சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சாலை விதிமுறைகள் குறித்து CBSE பள்ளியில் வினாடி வினா போட்டி 30 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்பு!



குடியாத்தம், பிப் 13-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆஷிர்வாத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி CBSE பள்ளியில் சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு 
சாலை விதிமுறைகள்  குறித்து நடத்தப்பட்ட வினாடி வினா  நிகழ்ச்சி
போட்டியில் 30 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்துகொண்டன. இதில் சிறப்பு விருந்தினராக ராமச்சந்திரன் குடியாத்தம் காவல் துறைத் துணைக் கண்காணிப் பாளர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவர்களுடன்  முகேஷ் குமார் குடியாத்தம் போக்குவரத்துக் காவல் துறை ஆய்வாளர் , ஆஷிர்வாத் பள்ளியின் தாளாளர் மஞ்சுநாத் மற்றும் முதல்வர் பிரமிளா கண்ணன், பள்ளியின் கணக்காளர் செல்வகுமார் மற்றும்  S. S. ரமேஷ் குமார் பாரதி தமிழ் அறக்கட்டளை நிறுவனர் மீனா வட்டார வளர்ச்சி அலுவலர்,  சரவணன் மண்டல தலைவர்,  சாமிக்கண்ணன் காவல் துறை ஆய்வாளர். கவிதா காவல்துறை ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தி விழாவைச் சிறப்பாக நடத்தினர்
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு அளித்தும் சிறந்த 5 பள்ளிகளுக்கு கேடயம் அளித்தும் சிறப்புச் செய்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad