தாராபுரம் அரசு போக்குவரத்துக் கழக நடத்துனர் அவர்களின் மனிதநேய செயலை பாராட்டிய தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு போக்குவரத்துக் கழகத்தின் நடத்துநராக பணியாற்றி வருபவர் சையது அப்துல் ஹக்கீம் இவர் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது தாராபுரம் பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது அங்கு ஒரு பரிசு பைஇருப்பதை பார்த்த அவர் அது திறந்து பார்க்கும் போது ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் பணம் இருப்பதை அறிந்தார் உடனடியாக தாராபுரம் காவல்துறையினர் ஒப்படைத்தார் இச்செயலை தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அவர்கள் நடத்துநர் சையத் அப்துல் ஹக்கீம் அவர்களுக்கு நேரில் அழைத்து நன்றி தெரிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக