பல்வேறு மாவட்டங்களில் இருந்து 120 காளைகளுடன் கலை கட்டிய குடியாத்தம் எருது விடும் திருவிழா!
குடியாத்தம் ,ஏப் 16 -
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த சோழம்பூர் ராமாபுரம் மாடு விடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.இதில் வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை,
ஆகிய மாவட்டங்களில் இருந்தும்,
அண்டை மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், சுமார் 120 ற்க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு
வரப்பட்டன இதில் கால்நடை துறையால் 5 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. எஞ்சியுள்ள தகுதிவாய்ந்த காளைகள் களத்தில் கொண்டுவரப்பட்டு, வாடி வாசல் வழியாக சீறி பாய்ந்து ஓடின. தாசில்தார்கள் முரளிதரன். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாந்தி ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் விஜயராணி சுந்தரம். ஆகியோர் விழாவினை அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மாறு உறுதிமொழி எடுக்க வைத்து, கொடியைசைத்து தொடங்கி வைத்தார் இதில் வருவாய் ஆய்வாளர். லட்சுமி விஏஒ. தலைமையிலான வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் இடுப்பட்டனர். டி.எஸ்.பி பழனி மற்றும் லத்தேரி இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோரின் தலைமையிலான போலிஸ்சார் பாதுகாப்பு பணியில் இடுப்பட்டனர். கால்நடை மருத்துவர களின் பரிசோதனைக்கு பிறகே காளைகள் ஓடுபாதையில் அனுமதிக் கபட்டன. சுகாதார துறையினர், மின்வாரிய துறையினர், தீயணைப்பு வீரர்கள், கால்நடை துறையினர், பொதுப்பணி துறையினர், தயாரான நிலையில் இருந்தனர். குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக 100000ஆயிரம் இரண்டாவது பரிசாக 70.000ஆயிரமும் மூன்றாவது பரிசாக 50.000ஆயிரம் ரூபாயும், என 50 பரிசுகள் மாடுகளின் உரிமையாளர்களுக்கு விழா இறுதியில் விழா குழுவினர் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கிராம மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள் மாடு விடும் திருவிழாவை காண குவிந்திருந்தனர். நேற்று நடைபெற்ற மாடுவிடும் விழா சரியாக காலை 10மணியளவில் தொடங்கியது. தொடர்ந்து காவல்துறையினரும் விழா குழுவினரும் விழாஓடுபாதையின் அடிமந்தையிலி ருந்து வாடி வாசல் வரை உள்ள இருபுற சவுக்கு தடுப்புகள் மேலேயும், ஓடு பாதையின் உள்ளேயும், நின்று கொண் டிருந்த, இளைஞர்களை வெளியேற்றி ஒழுங்கு படுத்திய பின் விழா தொடர்ந்து நடத்தப்பட்டன. குறிப்பிடத்தக்கதாகும்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக