திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி கஸ்பாவில் பரிசுத்த மத்தியாவின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 128வது ஆலய அசனப்பண்டிகை இன்று நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு ஆராதனை நடந்தது. தொடர்ந்து 14ம் தேதி மற்றும் 15ம் தேதி நற்செய்தி கூடுகையில் ஆலீவ் அபிஷேக் தேவ செய்தி வழங்கினார்.
புதன்கிழமை மாலை 7 மணிக்கு அசனப்பண்டிகை ஆயத்த ஆராதனை நடந்தது. இதில் வெள்ளாளன்விளை சேகரகுரு தாமஸ் ரவிக்குமார் தேவ செய்தி வழங்கினார். தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு அசனப்பண்டிகை திருவிருந்து ஆராதனையில் மெஞ்ஞானபுரம் கனம் ஜாண் தாமஸ் சபை மன்ற தலைவர் அருட்திரு டேனியல் எட்வின் தேவ செய்தி வழங்கினார்.
மாலை 4 மணிக்கு அசனவிருந்து நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். இரவு 7.30 மணிக்கு ஸ்தோத்திரம் ஆராதனை நடைபெற்றது. நாளை வெள்ளிக்கிழமை மதியம் மும்மணி தியான ஆராதனை, மாலை அசன மீதிப்பொருட்கள் ஏலமும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் பண்டிகை ஆராதனையும், மாலை 4 மணிக்கு திருவிருந்து ஆராதனையும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை வெள்ளாளன்விளை சேகரகுரு தாமஸ் ரவிக்குமார், சபை ஊழியர் ஆல்வின் ஜேக்கப் மற்றும் சபை கமிட்டி தலைவர் எட்வின் தலைமையில் சபை மக்கள் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக