திருப்புவனத்தில் மின்மாற்றியின் கீழ் ஆபத்தான நிலையில் இயங்கி வரும் தற்காலிக தென்னங்கீற்று அமைப்பு கொண்ட கடையை அப்புறப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஏப்ரல், 2025

திருப்புவனத்தில் மின்மாற்றியின் கீழ் ஆபத்தான நிலையில் இயங்கி வரும் தற்காலிக தென்னங்கீற்று அமைப்பு கொண்ட கடையை அப்புறப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்.


திருப்புவனத்தில் மின்மாற்றியின் கீழ் ஆபத்தான நிலையில் இயங்கி வரும் தற்காலிக தென்னங்கீற்று அமைப்பு கொண்ட கடையை அப்புறப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல். 


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள சாலை ஓரத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் தென்னங்கீற்று பந்தல் அமைத்து தர்பூசணி மற்றும் பல வியாபாரம் இயங்கி வருகிறது. இத்தென்னங்கீற்று தர்பூசணி பழக்கடையானது சாலை அருகில் மிக உயரழுத்தத்தில் உள்ள மின்மாற்றியின் கீழ்பகுதியில் பெரும் ஆபத்து விளைவிக்க கூடிய வகையில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக மின்மாற்றியிலிருந்து தென்னங்கீற்று கடை பகுதியில் மிக எளிதாக தீ விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. சுட்டெரிக்கும் இக்கோடை வெயிலில் உயர் மின் அழுத்த மின்மாற்றி சிறிதும் அச்சமின்றி, சமூக விழிப்புணர்வின்றி இயங்கி வரும் இக்கடையை உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சாலையோரத்தில் உள்ள தென்னங்கீற்று கடையை தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள அக்கடையை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தி, கடை அமைத்த உரிமையாளருக்கு தகுந்த விழிப்புணர்வு வழங்கிட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad