18-வது பட்டமளிப்பு விழா
அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் 18-வது பட்டமளிப்பு விழா
கல்லூரி அரங்கத்தில் நடந்தது.
விழா இன்ஜினியர். எஸ்.கே.செய்யது அஹமது தலைமையில் நடந்தது.
கல்லூரித் தாளாளர் இன்ஜினியர் எஸ்.கே. குதா முகம்மது பட்டமளிப்பு விழாவை
துவக்கி வைத்தார். அஸ்ஸாதிக் கல்விக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் டாக்டர் இ.எம்.நிஜாமுத்தீன், பிபிஎம். காதர் மைதீன், இன்ஜினியர் விஎஸ்டி
அமானுல்லாஹ் மற்றும் எஸ் எம்.காஜா நஜிமுத்தீன் முன்னிலை
வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் ரஜப் பாத்திமா வரவேற்புரையாற்றினார்.
கல்லூரித்தலைவர் எஸ்.கே.செய்யது அஹமது தலைமையுரையாற்றினார்.
கல்லூரிப் பொருளாளர் ஓ.கே.ஜாபர் சாதிக், பத்திரிகையாளர் கவிஞர்.
மதுக்கூர் இராமலிங்கம், கள்ளக்குறிச்சி, ரேடியன்ஸ் ஐஏஎஸ் அகாடமி,
நிறுவனர் மற்றும் இயக்குநர் ரஹ்மத்துல்லாஹ் வாழ்த்துரை
வழங்கினர்.
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா முன்னாள் மண்டல இயக்குநர்
சதக்கத்துல்லாஹ் சிறப்பு விருந்தினராக கலந்து
கொண்டு 173 மாணவிகளுக்கு பட்டம் வழங்கிப் பேருரையாற்றி பேசுகையில்...பெண் கல்வி சமூகத்திற்கு மிக முக்கியம் என்று மாணவிகளுக்கு
அறிவுரை வழங்கினார்.
இவ்விழாவில் பெற்றோர்கள், பேராசிரியர்கள், உதவி அலுவலர்கள்
மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். பல்கலைக்கழகத் தரவரிசைப்
பட்டியலில் பொதுத்தமிழ், கணினி அறிவியல், இயற்பியல்,
ஆங்கிலம், வேதியியல் மற்றும் வணிகவியல் துறைகளில் மொத்தம் 9 மாணவிகள் இடம்
பெற்றிருந்தனர்.
செய்தி திருநெல்வேலி மாடசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக