‘யாதும் அறியான்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்
நெல்லையில் பிரமாண்ட வெளியீட்டு விழா
திருநெல்வேலி, ஏப். 26–
அதிர வைக்கும் சைக்கோ திரில்லர் கதையில் இயக்குனர் கோபி இயக்கத்தில் புதுமுகம் நடிகர் தினேஷ் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள ‘யாதும் அறியான்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நெல்லையில் பிரமாண்டமாக நடந்தது.
பிரேக்கிங் பாயின்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இயக்குனர் கோபி இயக்கத்தில் புதுமுகம் நடிகர் தினேஷ் கதாநாயகனாகவும், நாயகியாக பிரானாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, தம்பி ராமையா, விஜய் ‘டிவி’ கே.பி.ஒய்.ஆனந்தபாண்டி, ஷியாம்ஸ், ஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கொல்லிமலையில் இருக்கும் ஒரு பழைய பங்களாவிற்கு சென்ற நான்கு நண்பர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி சைக்கோ திரில்லர் ஜானரில் இதுவரை யாரும் கையாளாத ஒரு புதிய யுக்தியில் இயக்குனர் கோபி படமாக்கியுள்ளார். இவர், ஏற்கனவே இயக்கிய ‘தி பிளைண்ட் டைரக்டர்’ சிறந்த குறும்படத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளது.
‘யாதும் அறியான்’ படத்தில் நாயகனாக நடித்துள்ள தினேஷ் புதுமுகம் என்றாலும், இந்த படத்தில் நடிக்க ஒரு மாதம் தீவிர பயிற்சி எடுத்து, படத்தில் தத்ரூபமாக நடித்து உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
படத்தில் தொழில் நுட்பக்குழுவில் ஒளிப்பதிவை எல்.டி.,யும், இசையை தர்மபிரகாசும் அமைத்துள்ளனர். நெல்லை லெனின் கலை, எஸ்.கே.சித்திக் பாடல்கள் எழுத, படத்தின் பி.ஆர்.ஓ.,வாக தர்மதுரை, சுரேஷ் செயல்பட்டனர்.
படப்பிடிப்பு முழுவுதும் முடிவடைந்த நிலையில் யாதும் அறியான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நெல்லை வண்ணார்பேட்டை அப்னா பார்க் ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் உரிமையாளர் விவேகானந்தன் தலைமை வகித்தார். நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சினிமா விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., மாலைராஜா, மேலப்பாளையம் அலங்கார் தியேட்டர் மணிகண்டன், சமூக ஆர்வலர் வெங்கடாம்பட்டி திருமாறன் வாழ்த்துரை வழங்கினர்.
நடிகர் தினேஷ், இயக்குனர் கோபி ஏற்புரையாற்றினர்.
பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. போஸ்டர் வெளியிடப்பட்டதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் கோபி, நடிகர் தினேஷ் ஆகியோர் பத்திரியைாளர்களிடம் கூறியதாவது:
‘‘படத்தில் நடித்தவர்கள் அனைவரும் இரவு, பகலாக அர்ப்பணிப்பு உணர்வுடன் முழு ஈடுபாட்டோடு, சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களாகவே மாறி தங்கள் நடிப்பை, திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். படம் நிச்சயம் வெற்றியை பெற்றுத் தரும். அதற்கு சினிமா ரசிகர்கள் அனைவரும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளித்து படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். படத்தில் நடித்தவர்கள் அளித்த ஒத்துழைப்பால் திட்டமிட்டபடி குறித்த காலத்தில் படத்தை முடிக்க முடிந்தது. படத்தின் டிரைலர் விரைவில் வெளியிடப்படும். ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் படம் வெ ளியாகும்,’’ என்றனர்.
பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
***
செய்தி மாடசாமி நெல்லை +91 94428 83342
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக