ஆசிரியர்களின் கோரிக்கையினை ஏற்று ஏப்ரல் 19 சனிக்கிழமை விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு விடுமுறை - அரசுக்கு ஆசிரியர்கள் வரவேற்பு!
வேலூர் , ஏப் 16 -
வேலூர் மாவட்டம் விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு வருகின்ற 19.04.25 சனிக் கிழமை விடுமுறை அளித்துள்ளதற்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாகவும் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பாகவும் பள்ளிக்கல்வித்துறைக்கும் தேர்வுத் துறைக்கும் வரவேற்பும் நன்றியுடம் தெரிவித்துக்கொள்கின் றோம்.
இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பொ.அன்பழகன், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.கிறிஸ்தவர்களின் முக்கிய தினங்களாக ஏப்ரல் 17ஆம் தேதி பெரிய வியாழன், ஏப்ரல் 18 ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 20 ஆம் தேதி ஈஸ்டர் டே என்ற அடிப்படையில் முக்கிய தினங்கள் கொண்டாடப்பட இருக்கின் றன ஏப்ரல் 19 ஆம் தேதி ஹோலி சாட்டர்டே வர இருப்பதால் அன்றைய தினத்தில் முகாமிற்கு விடுமுறை அளித்திட கோரிக்கையை வைத்தோம்.
தேர்வுத்துறை இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று முதுகலை ஆசிரியர்களின் கோரிக்கை யினை ஏற்று ஏப்ரல் 19 ஆம் தேதி ஹோலி சாட்டர்டே முன்னிட்டு விடுமுறை அளித்து ஆணையிட்டுள்ளார் ஆசிரியர்களின் கோரிக்கையினை ஏற்று ஆணை பிறப்பித்த தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர் ஆகியோர்களுக்கும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாகவும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பாகவும் வரவேற்பும் நன்றியும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக