விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தினை 283 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஏப்ரல், 2025

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தினை 283 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தினை 283 பயனாளிகளுக்கு 
வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கான வேலை உத்தரவினை 283-பயனாளிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V. மார்கண்டேயன் தலைமையில் பயனாளிகளுக்கு வழங்கினார்.

நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல் மற்றும் பெரியதுரை லட்சுமி பிரபா அலெக்சாண்டர் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad