கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஏப்ரல், 2025

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் கன்னியாகுமரி மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் விபத்துகளை தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று கன்னியாகுமரி ரவுண்டானா மற்றும் விவேகனந்தபுரம் பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக கன்னியாகுமரி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு தர்பூசணி பழம் வழங்கப்பட்டது. மேலும் சாலை போக்குவரத்து விதிகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன்
'NO HELMET NO ENTRY' மற்றும் சாலை போக்குவரத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.இந்த நிகழ்வு பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று ள்ளது.

தமிழககுரல் செய்திகளுக்காககன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், 
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad