திருப்பத்தூர் 29 வது வார்டு சி கே சி நகர் பகுதியில் வசித்து வரும் 93 குடும்பத்தினர் பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

திருப்பத்தூர் 29 வது வார்டு சி கே சி நகர் பகுதியில் வசித்து வரும் 93 குடும்பத்தினர் பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

திருப்பத்தூர் 29 வது வார்டு சி கே சி நகர் பகுதியில் வசித்து வரும் 93  குடும்பத்தினர் பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
திருப்பத்தூர் , ஏப் 29 -

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில்  இன்று பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர் அதில் திருப்பத் தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்டு 29 வது வார்டு சி கே சி நகர் பகுதியில் வசித்து வரும் 93  குடும்பத் தைச் சார்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் பின்பு  மனுவில் குறிப்பிட்டிருந்தது நாங்கள் பல வருடங்களாக 29 வது வார்டு சி கே சி நகர் பகுதியில் வாழ்ந்து வருகிறோம் நாங்கள் வசித்து வரும் இடத்திருக்கு ஏற்றவாறு தெருக்களையும் சாலைகளை யும் குடிநீரையும் அமைத்துக் கொடுத்து பிறகு எங்கள் கிராமம் திருப்பத்தூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது அதன் பிறகு திருப்பத்தூர் நகராட்சியில் எங்களுக்கு தடையற்ற குடிநீரும் மின் விளிக்குகளும் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்தும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் எங்களிடம் இருந்து வசூலித்துக் கொள் கிறது மேலும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருப்பத்தூர் வட்டாட்சியர் அவரின் கீழ் பணி புரியும் கிராம நிர்வாக அலுவ லர் வருவாய் ஆய்வாளர் ஆகியோர்களும் மேர் சொன்ன இடத்தினை ஆய்வு செய்து அதில் உள்ள ஆர் சி சி மேல்மாடி வீடுகள் 78, ஓடு வீடு வீடுகள் 5, சிமெண்ட் வீடுகள் 7, ஓலை வீடு 1, என கணக்கீடுகளை எடுத்துச் சென்றார்கள் பின்பு திருப்பத்தூர் டி என் நம்பர் 1324,1344 ஆகியவைகள் சர்க்கார் புறம்போக்காக இருந்து வரும் நிலையில் மேற்சொன்ன சொத்துக்களை எங்களின் குடியிருப் புகள் உள்ள பகுதியினை மறைத்தும் சட்டவிரோதமாக ஆதாயம் அடையும் நோக்கில் பல நபர்கள் மோசடியான ஆவணத்தை உருவாக்கும் நோக்கோடு செயல்பட்டு வருவதாக நாங்கள் அறிகிறோம் வீடு இல்லாதவர்களுக்கு ஐந்து வருடத்திற்கு மேல் குடியிருக்கும் நபர்களுக்கு உரிய வகையில் பட்டா வினை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது இந்த அரசாணை குறிப்பிடத் தற்கு முன்பு இருந்து நீண்ட காலமாக நாங்கள் பட்டா வேண்டி தங்களின் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித பலனும் இன்றி மனுக்களை நிலையை அறிய முடியாமல் உள்ளோம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது 
இதனை தனிப்பட்ட ஒரு நபரான  ராமச்சந்திரன் மகன் சிவா என்பவர் அந்த இடம் அனைத்தும் எனக்கே சொந்தம் என ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறார் என தெரிவிக்கிறார்கள் ஆகையால் நாங்கள் வாழ்ந்த  93 குடும்பங்களுக்கு உடனடி யாக பட்டா வழங்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகை புரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad