ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் சஹஸ்ரநாம புஷ்ப யாகம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் சஹஸ்ரநாம புஷ்ப யாகம்.

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் சஹஸ்ரநாம புஷ்ப யாகம் . 

 ஸ்ரீவைகுண்டம் ஏப்ரல் 28 நவதிருப்பதிகளில் முதலாவது ஆன கள்ளபிரான் கோவிலில் கடந்த10 நாட்களாக திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளான இன்று சஹஸ்ரநாம புஷ்ப யாகம் நடந்தது. 

அதனை முன்னிட்டு காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 8.30 மணிக்கு திருமஞ்சனம். 9 மணிக்கு தீபாராதனை. 10.30 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் படிக்கப்பட்டு சாத்து முறை நடந்தது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை. 6.00 மணிக்கு உற்சவர் கள்ளபிரான் தாயார்களுடன் சயனக்குறட்டற்கு எழுந்தருளினார். 

6.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. 7.00 மணிக்கு மல்லிகை. ரோஜா. பிச்சிப்பூ . தாமரை. போன்ற மலர்களால் அர்ச்சகர்கள் ரமேஷ். வாசு. நாராயணன். ராமாநுஜம்.சீனு ஆகியோர் சஹஸ்ரநாம அர்ச்சனையுடன் அர்ச்சனையுடன் புஷ்ப யாகம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி.சீனிவாசன். தேவராஜன் வாசன். திருவோங்கடத்தான்.வேங்கட கிருஷ்ணன் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன். ஆய்வாளர் முருகன். அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். புஷ்ப உபயதாரர்கள் கோதை கிருஷ்ணன். சிவப்பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad