நவதிருப்பதி - ஆழ்வார்திருநகரி சித்திரை திருவிழா கொடியேற்றம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

நவதிருப்பதி - ஆழ்வார்திருநகரி சித்திரை திருவிழா கொடியேற்றம்.

ஆழ்வார்திருநகரி சித்திரை திருவிழா கொடியேற்றம். 

ஏப் 30 நவதிருப்பதிகளில் ஒன்பதாவது ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் பொலிந்து நின்ற பிரான் உற்சவம் நடக்கிறது. இன்று சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. 

இன்று காலை 4.30 மணிக்கு விஸ்வரூபம். 4.45 மணிக்கு திருமஞ்சனம். 5.30 மணிக்கு தீபாராதனை. 6 மணிக்கு நித்தியல் கோஷ்டி. 6.30 மணிக்கு பொலிந்து நின்ற பிரான் தாயார்களுடன் கொடிமரம் அருகில் எழுந்தருளினார். உடன் நம்மாழ்வாரும் எழந்தருளினார். 6.40 மணிக்கு. கொடிப்பட்டம் மாட வீதி சுற்றி வந்தது. 

கொடிமர பூஜைக்கு பின் 7. 10 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தினசரி காலை தோளுக்கினியானில்ரத வீதி புறப்பாடும் மாலை 6 30 மணிக்கு இந்திர விமானம். சிங்கம். அனுமார். சேஷன். யானை. குதிரை. வெட்டி வேர் சப்பரம் போன்ற வாகனங்களில் மாட வீதி. ரதவீதி புறப்பாடு நடைபெறுகிறது. 

மே. 3 ந் தேதி 5 ம் திருவிழாவை முன்னிட்டு கருடசேவை நடைபெறுகிறது. மே 7 ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் கண்ணன் விவேக். சுவாதி. எம்பெருமானார் ஜீயர். நிர்வாக அதிகாரி சதீஷ் அறங்காவலர் குழுத் தலைவர் ராமானுஜ( எ) கணேசன். உறுப்பினர்கள் கிரிதரன். காளிமுத்து. ராமலட்சுமி செந்தில். கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad