திருநெல்வேலி டாக்டர். அகர்வால்ஸ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனருக்கு சிறந்த அறிவியல் விருது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

திருநெல்வேலி டாக்டர். அகர்வால்ஸ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனருக்கு சிறந்த அறிவியல் விருது.

திருநெல்வேலி டாக்டர். அகர்வால்ஸ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனருக்கு சிறந்த அறிவியல் விருது

ஆசியா – பசிபிக் கண் மருத்துவவியல் அகாடமி (APAO) வழங்கியது. சென்னை: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 2025: ஆசியா - பசிபிக் கண் மருத்துவவியல் அகாடமியின் (APAO) 2025 – ம் ஆண்டுக்கான வருடாந்திர கூட்டம் நம் நாட்டின் தலைநகரான புதுடெல்லியில், 2025 ஏப்ரல் 03 மற்றும் ஏப்ரல் 06-க்கு இடைப்பட்ட தினங்களில் சிறப்பாக நடைபெற்றது.

APAO 2025 காங்கிரஸ் என அழைக்கப்படும் இம்மாநாடு, உலகளவில் புகழ்பெற்ற கண் மருத்துவ நிபுணர்கள், அவர்களது நிபுணத்துவத்தையும், அனுபவத்தையும் உலகளவில் மற்றும் குறிப்பாக ஆசியா – பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், கண் மருத்துவ சிறப்பு நிபுணர்கள், கண் அறுவைசிகிச்சை வல்லுனர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களோடு பகிர்ந்து கொள்வதற்கான ஒரு நேர்த்தியான செயல்தளமாக இருந்தது.
இந்த ஆண்டு, அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் (AIOS) 83வது வருடாந்திர மாநாட்டையொட்டி, அதனோடு சேர்த்து APAO மாநாட்டையும் இந்தியா ஏற்பாடு செய்து நடத்தியது. “கண் மருத்துவயியலில் உயர்நேர்த்தி நிலையை கொண்டாடுவது” என்பது APAO 2025 காங்கிரஸ் – ன் கருப்பொருளாக இருந்தது. தொடர்ந்து மாற்றம் கண்டு வருகின்ற கண் பராமரிப்பு சிகிச்சையின் எதிர்காலத்திற்கு இன்றைய கண் மருத்துவ நிபுணர்களை தயார்செய்யும் குறிக்கோளோடு இம்மாநாடு நடத்தப்பட்டது.

திருநெல்வேலியில் உள்ள டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குனர் புரொஃபசர் (டாக்டர்) D. லயனல் ராஜ், இந்நிகழ்வில் “சிறந்த அறிவியல் ஆய்வுக் கட்டுரை” விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார். “நோயாளிக்கான புலனுணர்வு காட்சி தூண்டுதல், குறுக்கு-இணைப்பு கொண்ட நிலையான கூம்பு விழிப்படலம் என்பதில் பார்வைத் திறனையும், மாறுபட்ட உணர்திறனையும் மேம்படுத்துகிறது”: 

எதேச்சையாக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையை டாக்டர். லயனல் ராஜ் சமர்ப்பித்திருந்தார். கடந்த ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெற்ற APAO 2024 மாநாட்டு நிகழ்வில், “சாதனை விருது” என்ற கௌரவம் மிக்க விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad