தமிழகம் முழுவதும் வருவாய்துறை அலுவலகத்தில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்!
குடியாத்தம் , ஏப் 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்ட மைப்பு தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற் கும் 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் இன்று மாலை தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் தலைமை தாங்கினார்
குடியாத்தம் கிராம நிர்வாக அலுவலர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரகு முன்னி லை வகித்தார் வட்டத் தலைவர் செந்தில் வரவேற்றார் இதில் கிராம உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ்
மற்றும் சிவரஞ்சனி எழிலரசி உஷா ஆகியோர் பங்கேற்றனர் இறுதியில் கிராம உதவியாளர் பழனி நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக