உலக புத்தக நாள் முன்னிட்டு பி.கே.புரம் துளிர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் கலை விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

உலக புத்தக நாள் முன்னிட்டு பி.கே.புரம் துளிர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் கலை விழா!

உலக புத்தக நாள் முன்னிட்டு பி.கே.புரம் துளிர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் கலை விழா!
கே. வி குப்பம் , ஏப் 25 -

வேலூர் மாவட்டம் உலக புத்தக நாள் முன்னிட்டு கீ.வ.குப்பம் ஒன்றியம் பி.கே. புரம் துளிர் பள்ளியில், அறிவியல் கண் காட்சி மற்றும் கலை விழா நடைபெற்றது. 
தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர். செ.நா.ஜனார்தனன்  மாவட்டத் தலைவர் பேராசிரியர் முனைவர் பே.அமுதா ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்தின் முன்னாள் பெருந் தலைவர்  கே.சீதாராமன் அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.முரசொலி தமிழ் மன்ற நிறுவனத் தலைவர் மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணை செயலாளர் சி.கோபி அறிவியல் கண்காட்சியில் ஒரு அரங் கினை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர்.செ.நா.ஜனார்தனன், மாவட்டத் தலைவர் பேராசிரியர் முனைவர் பே.அமுதா ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று பாராட்டு சான்றிதழ்களும் பரிசுகளும்வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.மேலும் விழாவில் அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர்கள் கே.விசுவநாதன் எஸ். கணேசன், நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், எஸ்.சுகுமார். பிரசாந்த், கே.வி.குப்பம் ஒன்றிய நிர்வாகிகள்மே.கோ.இராமகிருட்டினன் மகாலிங்கம் பழைய கிருஷ்ணா புரம் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் ஷாம்சுந்தர், உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக பள்ளியின் தாளாளர் வீரா.குமரன் வரவேற்புரை யாற்றினார். தலைமையாசிரியை கு.சோபனா, இரா.ரவிச்சந்திரன், துளிர் பள்ளி ஆசிரியைகள் பி.சுதா, ஜி.இந்துமதி, எம்.கோமதி, எஸ்.லட்சுமிபிரியா, மற்றும் அலுவலக உதவியாளர் எஸ்.உஷா பெற்றோர், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.அறிவியல் கண்காட்சியை மாணவர்கள் மிகச் சிறப்பாக அமைத்து மாணவர்களின் பல்வேறு திறமைகளை மேடையில் பெற்றோர்கள் முன் வெளிப் படுத்தினர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad