வாலாஜா வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை , ஏப் 25 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் வாலாஜா வட்டாட்சியர்
அலுவலக வளாகத்தின் முன்பு இன்று மாலை வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய் துறை சங்கத்தின் மாவட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார். தமிழ்நாடு
கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவக்குமார்முன்னிலை வகித்தார். மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் நில அளவைதுறை அலுவலர்கள் உள்ளிட்ட 70 க்கும் மேற் பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்கது இதனால் வட்டாட்சிய வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பாக இருந்தது பொதுமக்கள் பள்ளிகளில் குழந்தை களை சேர்க்க சான்றிதழ் பெற வந்த பொது மக்களுக்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது பெரிதும் பாதிக்கப்பட்டன.
சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக