குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகில் மத்திய அரசை கண்டித்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
குடியாத்தம் , ஏப் 11-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வக்பு திருத்த சட்டத்தினை வாபஸ் பெற வலியுறுத்தி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மசூதிகள் எதிரில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங் கள்,மனித சங்கிலி உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் பகுதியில் உள்ள சவுக் மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பின் மசூதி எதிரில் இஸ்லாமியர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் பள்ளிவாசலின் கதிபே இமாம்கள் தகிஹஜரத்,ரஷித் ஹஜரத் ஆகியோர் தலைமையில் வக்பு திருத்த சட்டத்தினை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர் இதில் ஏரளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர் அதே போல் நகரில் உள்ள 30 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் முன் இஸ்லாமியர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர் என குறிப்பிடதக்கது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக