தூத்துக்குடி, வட்டகோவில் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் மகன் விஜய். இவர் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வந்தார். இவர் தனது நண்பர்கள் 7 பேருடன் வாழவல்லான் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்துள்ளார். பொதுவாக இப்பகுதி சுற்றுவட்டார பொதுமக்கள் ஆண்டு கணக்கில் தடுப்பணை சுவர் கரை ஓரத்திலே குளித்துவிட்டு பாதுகாப்பாக சென்று வருகின்றனர்.
நடு பகுதிகளில் முன்பு மணல் குவாரிகள் மூலம் மணல் அள்ளியதால் கரையை விட்டு தள்ளிய பகுதிகளில் கிணறு போல ஆழம் உள்ளதாக அப்பகுதியில் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இவர்கள் தடுப்பணை தடுப்புச் சுவர் பகுதி தண்ணீர் குறைவாக இருந்ததால் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
ஆழமான பகுதிக்கு சென்று குளித்த இவர் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கியதாக நண்பர்கள் கூறுகின்றனர். மீட்க முயல்வதற்குள் கடுமையான ஆழப் பகுதியில் மூழ்கி விட்டதாக நண்பர்கள் கதறியவாறு தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து ஏரல் தீயணைப்பு வீரர்கள் தகவல் தெரிந்து வந்ததும், அப்பகுதி பொதுமக்கள் வாழை மரத்தின் படகு போல் கட்டி தேடியும் அவரது உடலை சம்பவத்தன்று மாலை மீட்டனர். இது குறித்து ஏரல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக