தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தர்ணா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஏப்ரல், 2025

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தர்ணா!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலகம் முன்பு  விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தர்ணா!

திருமால் நகரில் பாதாள சாக்கடையை சரி வர சுத்தம் செய்யாததால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலகம் முன்பு விசிகவினர் தர்ணா! சரி செய்யாவிடில் ‌ ஒவ்வொரு பாதாள சாக்கடையிலும் தாங்களாகவே இறங்கி சுத்தம் செய்வதாக எச்சரிக்கை!

திருப்பத்தூர் , ஏப் 16 -

திருப்பத்தூர் மாவட்டம் ‌ திருப்பத்தூர் அடுத்த 36 வது வார்டு திருமால் நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 
அந்தப் பகுதியில் பாதாள சாக்கடை பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. மேலும் பாதள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்து நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுத்துகிறது. எனவே இதனை சரி செய்ய வேண்டும் எனவே அப்பகுதியைச் சேர்ந்த 36 ஆவது வார்டு கவுன்சிலரும் விடுதலை சிறுத்தை கட்சியின் திருப்பத் தூர் மேற்கு மாவட்ட செயலாளருமான வெற்றி கொண்டான் இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மட்டுமின்றி நகராட்சி ஆணையர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனாலும் இதுவரை கண்டும் காணாமல் மெத்தன போக்காக செயல்படும் அதிகாரிகளை கண்டித்து திடீரென எலவம்பட்டி பகுதியில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் முன்பு கவுன்சிலர் வெற்றி கொண்டான் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆதரவாளர்கள் சுமார் 20க்கும் மேற்பட் டோர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும் உடனடியாக திருமால் நகர் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையை சரி செய்யவிடில்  விடுதலை சிறுத்தை கட்சியினரை ஒன்றிணைத்து ஒவ்வொரு பாதாள சாக்கடை  குழாய்கள் உள்ள இடங்களில் தாங்களாகவே குழியில் இறங்கி சுத்தம் செய்யும் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

 செய்தியாளர் 
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad