அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி இணைந்து நடத்தும் கல்லீரல் பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி!
குடியாத்தம் ,ஏப் 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரிமற்றும் அத்தி மருத்துவமனை இணைந்து
கல்லீரல் பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரக வியல் நிபுணர் டாக்டர் p. சௌந்தரராஜன் அவர்கள் பொது மக்களுக்கு போதை மற்றும் கல்லீரல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணியை ஏற்பாடு செய்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட SKT மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சௌந்தரபாண்டியன் மற்றும் அரசு BNYS மருத்துவர் டாக்டர் மேனகா ஆகியோர் பேரணியை கொடி அசைத்து துவக்கி போதை விழிப்புணர்வு பற்றிய சிறப்பு உரையாற்றினார்கள் குடியாத்தம் கிராம காவல் துறை ஆய்வாளர் சாந்தி மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் முகேஷ்குமார் ஆகியோர் பேரணிக்கு ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு கொடுத்து பேரணியில் கலந்துக் கொண்டனர்.அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் k தங்கராஜ் அனைவரை யும் வரவேற்றார். அத்தி மருத்துவ மனையின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ கென்னடி தலைமை தாங்கினார்.குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் k குமரவேல் அவர்கள் காக்க தோப்பு கிராம ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் மற்றும் அத்தி செவி லியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனிதுரை,அத்தி மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாணவர்கள் பொது மக்களுக்கு போதை பயன்படுத்து வதால் ஏற்படும் தீமைகள் அதனால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என்பதை பதாகைகள் மற்றும் பேனர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக