போதை ஊசி மற்றும் போதை மாத்திரை களை பயன்படுத்திபயன் படுத்திய மூன்று பேர் கைது- குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை!
குடியாத்தம் , ஏப் 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக மாநில எல்லையோர பகுதிகளில் இளைஞர்கள் சிலர் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்
சைனகுண்டா சோதனை சாவடி அருகே குடியாத்தம் தாலுகா போலீசார் கிராமிய ஆய்வாளர் சாந்தி தலைமையில் ரோந்து பணியில் ஈடுப ட்டனர் அப்பொழுது அந்த வழியாக வந்த மூன்று நபர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பொழுது அவர் களிடம் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது அதை அவர்கள் பயன்படுத்துவதாக கொண்டு வந்ததும் விசாரணைக்கு தெரியவந்தது இதனையடுத்து போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகளை பயன்படுத்திய குடியாத்தம் அடுத்த கல்லூர் பகுதியை சேர்ந்த அரவிந்தன் (வயது 24) சஞ்சய் (வயது 25)மனோஜ் (வயது 22) ஆகிய மூன்று பேரை குடியாத்தம் தாலுகா போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு ஊசிகள் மற்றும் 7 போதை மாத்திரை களை பறிமுதல் செய்து மேலும் இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக