நெல்லை தக்ஷின மாற நாடார் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழர் விடுதலைக் களம் சார்பில் மனு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

நெல்லை தக்ஷின மாற நாடார் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழர் விடுதலைக் களம் சார்பில் மனு.

நெல்லை தக்ஷின மாற நாடார் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழர் விடுதலைக் களம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழர் விடுதலைக் களம் நிறுவன தலைவர் ராஜ்குமார் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மே மூன்றாம் தேதி வள்ளியூர் அடுத்த கள்ளிகுளம் தக்ஷண மாற நாடார் சங்க கல்லூரியில் வைத்து அந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

அன்றைய தினம் கல்லூரி தேர்வுகளும் நடைபெற இருப்பதால் அனைத்து சாதி மாணவ மாணவிகளும் தேர்வு எழுதவரும் சூழல் உள்ளது சங்கத்தின் பொதுக்குழு நடைபெறும் போது ஒரு சாதியை குறிப்பிட்டு கோஷங்களும் முழக்கங்களும் எழுப்பு நேரிடும் இதன் காரணமாக எதிர் தரப்பு கோஷங்கள் மாணவ மாணவிகள் மத்தியில் இருந்து வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது 

இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக சங்கப் பொதுக்குழுவை வேறு தேதியில் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அல்லது மாற்று இடத்தில் பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad