மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் சாதாரண நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் சாதாரண நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர்மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெற்றது. இதில் நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம், நகராட்சி பொறியாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடைபெற்ற இந்த நகர் மன்ற கூட்டத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள தெரு சின்டெக்ஸ் தொட்டிகளை தூய்மைப்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது. கழிவுநீர் வாய்க்காள்களை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. அனைத்து தெருக்களிலும் குடிநீர் விநியோகம் தேவைப்படுவதால் நகராட்சி தலைவர் மக்கள் பயன்பாட்டிற்காக நீர்த்தேக்க தொட்டி அமைத்து தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. வண்ணான்குளம், செட்டிகுளம் சாலையோர நடைமேடை அமைத்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் நகராட்சி மீது உள்ள சில அதிருப்திகள் மற்றும் குற்றச்சாட்டுகளை சில நகர் மன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் அவரவர் வார்டுப் பகுதிகளில் தேவைப்படும் உதவிகளை கோரிக்கைகளாக முன்வைத்தனர். குறிப்பாக 14வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேரோடும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், விஏஓ அலுவலகம் முதல் பிரதான சாலைகளில் உள்ள வடிகால்களை தூர்வாரவும், தனி ஒரு ஆளாக 12 முதல் 15 கழிப்பறைகளை சுத்தம் செய்யும் நபர்களோடு கூடுதலாக இரண்டு மூன்று அவர்களை வேலை அமர்த்தவும், கொசு மருந்து தெளிப்பான்களை மழைக்காலத்தில் தெளிப்பது போல் கோடை காலத்திலும் தெளித்திட வழிவகை செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் ராஜேஸ்வரி இராஜேந்திரன், கவுன்சிலர் லட்சுமி சங்கிலி, கவுன்சிலர் ரா.செல்வகுமார், கவுன்சிலர் சித்ரா மன்னார் மன்னன், கவுன்சிலர் இந்துமதி திருமுருகன், கவுன்சிலர் சதீஷ்குமார், கவுன்சிலர் காளீஸ்வரி உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக