கன்னியாகுமரி,சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள் தங்களின் படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்-தங்கள் விசைப்படகுகளை சீரமைக்க ரூபாய் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை செலவினம் ஏற்படுவதால் அரசு தங்களுக்கு கடன் உதவி வழங்க வேண்டும் அதேபோன்று மீன்பிடி தடை காலத்தில் வழங்கக்கூடிய நிவாரண உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் குறிப்பாக சின்னமுட்டம் துறைமுகத்தை விரிவாக்கம் செய்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் விரிவாக்க பணி மேற்கொள்ளவில்லை எனவும் மீனவர்கள் பேட்டி.
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்,
ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக