திருமங்கலத்தில் ஒன்றிய அரசான பா.ஜக.அரசை கண்டித்து அணைத்து ஜமாத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருமங்கலத்தில் ராஜாஜி சிலை அருகே அனைத்து ஜமாத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அப்துல் கலாம் ஆசாத் வரவேற்புரையாற்றினார். கூட்டத்திற்கு திருமங்கலம் நகர் ஐக்கிய ஜமாத் தலைவர் கனவாய்பிச்சை தலைமை வகித்தார். முன்னதாக காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இறந்த குடும்பத்தினருக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் மத்திய அரசை கண்டிக்கிறோம். வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய். வக்பு வாரிய சொத்தை அபகரிக்கக் கூடாது. வக்பு வாரிய சொத்து இறைவன் சொத்து. இறைவன் சொத்தை அபகரித்தால் அழிவு நிச்சயம். முஸ்லிம்களை வஞ்சிக்காது. மதத்தின் பெயரால் மக்களைப் பிடிக்காது. வெருப்பு அரசியலை வேர் அறுப்போம். அரசியல் அமைப்புச் சட்டத்தை காப்பாற்று. சமூக ஒற்றுமை ஓங்கட்டும். சமூக நல்லிணக்கம் வெல்லட்டும். எது வரினும் அஞ்ச மாட்டோம். இறுதி வரை எதிர்ப்போம். மஸ்தான அம்மாள் தர்கா பள்ளிவாசலைச் சேர்ந்த முகமது சித்திக் கண்டன உரையாற்றினார். குஜராத்தில் முஸ்லிம்களை கொன்று அதன் மீது ஆட்சி நடத்தியவர்கள். நீங்களா முஸ்லிம்களை பாதுகாக்க முடியும். வக்பு சொத்தை ஒருவர் கொடுத்து விட்டால் அதனை வாங்கவும் முடியாது விற்கவும் முடியாது. தற்போது வக்பு சொத்தா இல்லையா என மாவட்ட ஆட்சியர் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை இந்த சட்டத்தில் உள்ளது. இது ஒரு சார்பு முறையில் சொல்ல வாய்ப்புள்ளது. வக்பு சொத்தை ஒருவர் அபகரித்து 12 ஆண்டு காலம் வைத்திருந்தால் அது அவருடைய சொந்த சொத்து என வந்துள்ளது. இந்தச் சட்டம் எதுக்காக வருகிறது என்றால் அம்பானி அதானி போன்ற பண முதலைகளுக்காக கொண்டுவரப்பட்ட சட்டம். இந்த சட்டத்திற்கு இவர்களைச் சார்ந்த எம்பிக்கள் அனைவரும் கையெழுத்து போட்டுள்ளனர். இந்தச் சட்டம் முஸ்லிம்களையும் முஸ்லிம் சொத்துக்களையோ பாதுகாப்பதற்காக அல்ல. நாங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பதால் தான் அறவழி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த சட்டத்தை முறியடிப்போம் என பேசினார்.இதில் பள்ளிவாசல் நிர்வாகிகள் அக்பர்ராஜா, முகமது அப்பாஸ், நஜ்மா பேகம்,உமர் பாரூக் உள்ளிட்டோ கண்டனயுறை ஆற்றினர்.இறுதியாக சேக் அப்துல்லா நன்றியுரை ஆற்றினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக