தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் சரவண முருகன், கோ. அன்புச்செல்வி, சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம் முன்னிலையில், தமிழில் பெயர் பலகைகளை காட்சிப்படுத்தும் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழில் பெயர் பலகை முதன்மை எழுத்தாகவும் 50 சதவீதம், இரண்டாம் ஆங்கில எழுத்து அதைவிட சிறிதாகவும் 30 சதவீதம். மற்ற பிராந்திய மொழிகள் 20 சதவீதமாகவும் அமைக்க வேண்டும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் விளம்பரங்கள் செய்து உள்ளாட்சித் துறை தொழிலாளர் நலத்துறை வணிகர் சங்கங்கள் இணைந்து திருநெல்வேலி மாவட்டத்தில் முதன்மையாக தமிழில் பெயர் பலகைகள் அமைக்க வேண்டும் என உறுதி செய்யப்பட்டது.
இது கூட்டத்தில் அனைத்து வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவரும், தமிழ் பெயர் பலகை காட்சிப்படுத்தும் மாவட்ட குழு உறுப்பினரும், வள்ளியூர் வர்த்தகர்கள் சங்க தலைவருமான பி .டி. பி .சின்னதுரை, வள்ளியூர் வர்த்தகர்கள் சங்க செயலாளர் ஆர் .அந்தோணி செல்லதுரை, துணைத் தலைவர் பசுமதி பி மணி, இணை செயலாளர் பி. கண்ணன்,
நிர்வாக குழு உறுப்பினர்கள் பி. நல்லசிவன், எ .டி .ஆர் .துரை, வலங்கை புலி, சக்தி வள்ளியூர் வணிகர் நல சங்கத் தலைவர் எட்வின் ஜோஸ் செயலாளர் இ. கவின் வேந்தன், வள்ளியூர் வியாபாரிகள் சங்கம் தலைவர் முருகன் செயலாளர் எஸ், ராஜ்குமார் துணைச் செயலாளர் காதர் மைதீன். மற்றும் வணிகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக