குடியாத்தம் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட நியாய விலை கடை அங்கன்வாடி நிழல் கூடம் திறப்பு விழா!
குடியாத்தம் , ஏப் 18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கள்ளூர் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் திட்டத்தின் கீழ் ரூ 11 லட்சத்தில் பேருந்து நிழல் கூடும் மற்றும் அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 16.55000 மதிப்பிலான அங்கன்வாடி கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் நிதி திட்டத்தின் கீழ் 13 லட்சத்தில் நியாய விலை கடை கட்டிம் திறப்பு விழா நடைபெற்றது இவ்விழாவில் ஒன்றிய செயலாளர் கள்ளூர் கே .ரவி தலைமை தாங்கினார்
இதில் சிறப்பு அழைப்பாளராக
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அனைத்து தலைவர் டி .எம்.கதிர் ஆனந்தன் நிழல் கூடம் அங்கன்வாடி நியாய விலை கடை கட்டிடத்தை
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன் மாவட்ட துணை செயலாளர் ஜி எஸ் அரசு சிவூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் த. அகோரன் அவைத் தலைவர் முரளி
மாவட்ட இளைஞரணி துணை அமைப் பாளர் சத்தியமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் சக்தி தாசன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தீபிகா பாரத் அமுதா லிங்கம் சிவூர் ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் வட்ட வழங்க அலுவலர் பிரகாசம் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல அலுவலர் சமீம்ரிஹாணா கிராம நிர்வாக அலுவலர் ரகு மற்றும் அரசு அதிகாரிகள் அங்கன்வாடிபணியாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக