குடியாத்தத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் லிட், வேலூர் மண்டலம் பெட்ரோல் மையம் திறப்பு!
குடியாத்தம் , ஏப் 18 -
குடியாத்தம் பணிமனையில் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டீசல் (ம) பெட்ரோல் விற்பனை மையத்தை திறந்து வைத்து, ரூ.4.95 கோடி மதிப்பில் 12 புதிய பேருந்துகளின் இயக்கத்தை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் லிட்,
வேலூர் மண்டலம் குடியாத்தம் பணி மனையில் ரூ. 2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் டீசல் (ம) பெட்ரோல் விற்பனை மையத் தை திறந்து வைத்து, ரூ. 4.95 கோடி மதிப்பில் 12 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம்
லிமிடெட்ட் வேலூர் மண்டலம்குடியாத்தம் பணிமனையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உதவியுடன் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு டீசல் மற்றும் பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது 12 புதிய பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் வேலூர் மண்டலத்திற்கு ரூ.4 கோடியே 95 இலட்சம் மதிப்பிலான 6 புதிய நகர மகளிர் பேருந்துகளும், 6 புதிய புறநகர் பேருந்துகளும் இயக்கம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்துகள் காட்பாடி-பாகாயம் வழித்தடத்தில் 2 மகளிர் இலவச பேருந்துகளும், வேலூர்-பரதராமி வழித்தடத்தில் 1 மகளிர் இலவச பேருந்தும், வேலூர்-அத்தியூர் வழித் தடத்தில் 1 மகளிர் இலவச பேருந்தும், வேலூர்-ஏரிபுதூர் வழித்தடத்தில் 1 மகளிர் இலவச பேருந்தும், வேலூர்-அமிர்தி வழித்தடத்தில் 1 மகளிர் இலவச பேருந்தும், அரக்கோணம்-பெங்களூர் வழித்தடத்தில் 2 புறநகர் பேருந்துகளும், வேலூர்-சென்னை வழித்தடத்தில் 1 புறநகர் பேருந்தும், காஞ்சிபுரம்-பெங்களூர் வழித்தடத்தில் 2 புறநகர் பேருந்துகளும்,குடியாத்தம்-சிதம்பரம் வழித்தடத்தில் 1 புறநகர் பேருந்தும் என மொத்தம் 12 புதிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், வி. அமுலு விஜயன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் மு.பாபு, குடியாத்தம் நகர்மன்ற தலைவர் எஸ். சௌந்தரராசன், குடியாத்தம் ஒன்றியக்குழுத்தலைவர் என். இ. சத்யானந்தம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் க. குணசேகரன், பொது மேலாளர் அ. கணபதி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பொது மேலாளர் திரு. தீபக், தலைமை மேலாளர் சுபுதிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக