காவல் நிலையத்திற்குள் வந்த சிறுத்தையால் பரபரப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

காவல் நிலையத்திற்குள் வந்த சிறுத்தையால் பரபரப்பு


காவல் நிலையத்திற்குள் வந்த சிறுத்தையால் பரபரப்பு


நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள நடுவட்டம் பகுதியில் சமீப நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நடுவட்டம் காவல் நிலையத்திற்குள் இரவு 8:30 மணிக்கு சர்வ சாதாரணமாக உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையத்திற்குள் வந்து நோட்டமிட்ட சிறுத்தை மெதுவாக வெளியே சென்றது. காவல் நிலையத்தில் இருந்த காவலர் ஒருவர் அச்சத்தோடு சிறுத்தை வெளியே சென்றவுடன் கதவுகளை சாத்தும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவும் பயப்படுகின்றனர் வனத்துறையினர் இதை தன் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று காவல்துறை சார்பாகவும் பொதுமக்களும் கோரிக்கையும் எழுந்துள்ளது   


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad